சீனாவில் ‘பெங்’ என்ற மனிதர் தன் சாக்ஸை தினமும் முகர்ந்து பார்த்ததால் அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளது. பெங், ஆபீஸ் முடித்து விட்டு வீடு திரும்பிய பின், தன் சாக்ஸை முகர்ந்து பார்த்து ரசிப்பாராம். அவருக்கு அந்த ஸ்மெல் ரொம்ப பிடிக்குமாம்…
இப்படி தினமும் செய்த அவருக்கு, ஒரு நாள் நெஞ்சு வலியும், தீராத இருமலும் ஏற்பட்டது. உடனே டாக்டரை அணுகிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரை பரிசோதித்த டாக்டர் நுரையீரலில் தொற்று இருப்பதை கண்டறிந்தார். மேலும் அந்த தொற்று காலணிகளால் வரக்கூடியவை எனக் கூறிய டாக்டர், பெங்கிடம் இது பற்றி கேட்டபோது, தான் தினமும் சாக்ஸை முகர்ந்து பார்ப்பேன் என்று கூறினார்.
தற்போது பெங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெங்கை பரிசோதித்த டாக்டர் இந்த நிகழ்வை தனது Social Network-ல் பகிர்ந்தார். இதற்கு டாக்டரை கிண்டல் அடித்த மக்கள், ‘இதெல்லாம் ஒரு தகவலா’ என டாக்டரிடம் கேள்வி கேட்டனர்.
அதற்கு அந்த டாக்டர், “உங்கள் வீட்டில் குழந்தை இருந்தால், இது சாதாரண விஷயமாக தெரியாது” என்றார். நம்முடைய அலட்சியம் காரணமாக ஏற்படும் விளைவை உணர்த்தவே இதை Social Network-ல் பகிர்ந்தேன் என்றார். இந்த பதிவுக்கு பின், கிண்டல் அடித்த மக்கள் அந்த டாக்டரை பாராட்டியுள்ளனர்.
Discussion about this post