மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுக்களை துல்லியமாக ஆய்வு செய்து, புத்தகமாக வெளியிட உள்ளதாக தமிழகத் தொல்லியல்துறையின் முன்னாள் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள 13ஆம் நூற்றாண்டு காலத்து கல்வெட்டுக்களை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகத் தொல்லியல்துறையின் முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வரலாற்று மாணவர்கள் பயன்பெறும் வகையில், கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களை அச்சு எடுத்து அதனை 6மாதங்களில் புத்தகமாக வெளியிடவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கல்வெட்டுக்கள் மூலம், மாற்று மொழி எதிர்ப்பு, 13ஆம் நூற்றாண்டு காலத்திலேயே இருந்துள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post