ராஜராஜ சோழனின் நினைவிடமாக கருதப்படும் இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு

தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழனின் நினைவிடமாக கருதப்படும் இடத்தில் மாநில தொல்லியல் துறையினர் இன்று களஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன், கும்பகோணம் அருகே உடையாளூரில் சமாதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் மட்டுமே தற்போது உள்ளது. இந்த இடத்தில்தான் ராஜராஜ சோழன் சமாதி உள்ளதாக கூறப்படும் நிலையில், இதற்கு ஆதாரங்கள் இல்லாதநிலை காணப்படுகிறது.

இந்நிலையில், தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் அந்த இடத்தில் 5 பேர் கொண்ட குழுவினர் களஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் பூமிக்கும் கீழ் ஒருமீட்டர் ஆழத்தில் என்னென்ன பொருட்கள் உள்ளது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கென ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version