ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் கதையும், உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவரின் செங்கோல் கதையும் ஒன்று தான் என புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வருண் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். சர்கார் படத்தின் கதையும், செங்கோல் கதையும் ஒன்றுதான் என, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கமும் உறுதிப்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கு தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
சர்கார் படத்தின் கதை வருண் ராஜேந்திரனுடயது தான் என ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக்கொண்டார். மேலும், படத்தின் துவக்கத்தில் டைட்டில் போடும் போது கதை நன்றி என்று வருண் ராஜேந்திரன் பெயர் இடம் பெற தயாரிப்பு தரப்பு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால், இருதரப்பிடையே ஏற்பட்ட சமரசம் காரணமாக, திட்டமிட்டபடி சர்கார் படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
Discussion about this post