கோடைக்காலம் துவங்கும் முன்னே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தர்பூசணி, இளநீர், கரும்பு சாறுகளை பொதுமக்கள் தேடிச் செல்கின்றனர். ஏப்ரல், மே மாதம் துவங்கும் முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் கோடைக் காலம் துவங்கும் முன்பாகவே வெயில் 105 டிகிரியை தொட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால், வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
பகல் நேரங்களில் வீசும் அனல் காற்றால், பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வெப்ப தாக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள தர்பூசணி, பழங்கள், இளநீர், கரும்பு சாறுகளை தேடி செல்கின்றனர்.
Discussion about this post