காவல் நிலையத்தை பசுமை பூங்காவாக மாற்றிய காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிக்கிறது

சென்னை தரமணி காவல் நிலையத்தில் பூங்கா அமைத்து, மூலிகை செடிகளை வளர்த்து பசுமையாக மாற்றிய காவல் ஆய்வாளர் எம்.எஸ்.பாஸ்கருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சென்னை தரமணியில் உள்ள காவல்நிலையம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்கள் கூட மனம் மாறி செல்லும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் எம்.எஸ்.பாஸ்கர் முயற்சியால் விரிவு படுத்தப்பட்டு, காவல் நிலையம் முன்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு வருபவர்களின் கண்களுக்கு பசுமையை மட்டுமே காட்ட வேண்டும் என்பதற்காக தரையில் பச்சை வண்ண விரிப்பு அமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தை தனியார் பூங்காவாக மாற்றிய காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த பூங்காவில், துளசி, தூதுவளை, மந்தாரை, ஓமச்செடி, கீழாநெல்லி, நிலவேம்பு, சிரியாநங்கை, மலைவேம்பு, எலும்பிச்சை புல், உள்ளிட்ட மூலிகை செடிகளும், கொய்யா, பலா, மாமரம், போன்ற மரம் மற்றும் காய்கறி செடி வகைகள், பூச்செடிகள் என இந்த தரமணி காவல் நிலைய பூங்காவில் வைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தை பசுமை பூங்காவாக மாற்றிய காவல்ஆய்வாளர் எம்.எஸ் பாஸ்கருக்கு பொதுமக்கள் மட்டுமின்றி, உயர் அதிகாரிகளும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version