உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கபட்ட ஐபோன் 11 வரிசை செல்போன்கள் அறிமுகபடுத்தபட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியிட்டதில் மிகவும் சிறப்பான மாடலாக ஐபோன் 11 ப்ரோ கருதப்படுகிறது. இதில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய ஐபோனிலும் ஆப்பிள் ஏ13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 11 ப்ரோ மாடலில் ஐபோன் XS மேக்ஸ் மாடலை விட ஐந்து மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்கும் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. வைடு கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டுள்ளது. மென்பொருள் அப்டேட் மூலம் டீப் ஃபியூஷன் எனும் புதிய அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.
இது புகைப்படங்களை அழகாக்க ஒன்பது படங்களை ஒன்றிணைத்து சிறந்த புகைப்படத்தை அதிவேகமாக வழங்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் SloFiles எனப்படும் புதிய வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் முன்பக்க கேமரா மூலம் Slow Motion வீடியோக்களை எடுக்கலாம். அதே போல் பின் பக்க கேமரா உதவியுடன் ஒரே நேரத்தில் நின்றவாரே மூன்று கோணங்களில் புகைப்படம் எடுக்க முடியும். இதன் விற்பனை செப்டம்பர் 20-ம் தேதி துவங்க இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Discussion about this post