இமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் மிகக் குறைந்த விலைக்கே வணிகர்கள் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் ஆப்பிள் பயிரிட்டுள்ளனர். இந்த ஆண்டு ஆப்பிள் பழங்கள் நல்ல விளைச்சல் கண்டுள்ளன. 20 கிலோ ஆப்பிள் அடங்கிய ஒரு பெட்டி முன்பு இரண்டாயிரம் ரூபாய் வரை விலைபோனது. கடந்த ஒருவாரமாக ஒரு பெட்டி ஆப்பிள் 500 ரூபாய் என்கிற மிகக் குறைந்த விலைக்கே வணிகர்கள் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பயிரிடும் செலவு, பறிக்கும் செலவு, பெட்டியில் அடைப்பது, வாகன வாடகை ஆகிய செலவுக்கே இந்தத் தொகை போதாது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post