கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவிலிருந்து சில நிறுவனங்கள் வெளியேற திட்டமிட்டு வருகின்றன. இந்த நிலையில், ஸ்மார்ட் போன்களின் வருவாயை, அடுத்த 5 ஆண்டுகளில் 40 பில்லியன் டாலராக அதிகரிக்க திட்டமிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், தனது உற்பத்தியை சீனாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற உள்ளது. அந்த வகையில், 20 சதவீத பொருட்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் 40 பில்லியன் டாலர் அளவிலான பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாக உள்ளது. இந்தியாவில் ஆப்பிள் போன்களின் விற்பனை வரவு சராசரியாக 1 புள்ளி 5 பில்லியன் டாலராக உள்ள நிலையில், இதன் உற்பத்தி செலவு ஒரு பில்லியனுக்கும் மிக குறைவாக உள்ளதே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த 2018-19ஆம் ஆண்டுகளில், சுமார் 220 பில்லியன் டாலர் அளவிற்கு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது சீனாவில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால், ஆப்பிள் நிறுவனம் உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post