காஷ்மீர் இளைஞர்களால் ஆப்பிள் ஏற்றுமதி பாதிக்கப்படுவதாக கூறி காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ஜம்முவில் கண் மருத்துவமனை துவக்க விழாவில் காஷ்மீர் மாநில ஆளுநர் சத்தியபால் மாலிக் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், காஷ்மீர் இளைஞர்களால் ஆப்பிள் ஏற்றுமதி பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார். மேலும், ஆப்பிள் உற்பாத்தியாளர்களை மிரட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்த பேச்சு சமூக வளைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள மக்கள் எல்லை தாண்டி வர விரும்புவதாகவும், இதுதான் தாங்கள் விரும்பிய காஷ்மீர் என்று அவர்கள் சொல்லும் நிலையை உருவாக்க வேண்டும் என பிரதமர் தன்னிடம் கூறியதாகவும் அவர் கூறியுள்ளார்.
Discussion about this post