வாக்காளர் சரிபார்ப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உதவ வேண்டும் என ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புகைப்பட வாக்களர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் செய்யும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்க்கும் புதிய நடைமுறையை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், வாக்காளர் சரிபார்ப்பு பணியில், வாக்காளர் உதவி தொலைபேசி எண்- 1950, கைபேசி செயலி, தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் பொது சேவை மையங்கள் மூலம் திருத்தம் மற்றும் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
பிறந்த தேதி, முகவரி திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்ற மேற்கொள்ளும் இந்த பணியில், தலைமைக்கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி, பகுதி, ஊராட்சி, கிளை, வார்டு உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் தனிக்கவனம் செலுத்தி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறும் வாக்காளர் சரிபாத்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுமாறு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Discussion about this post