இந்தியா விமான படையை மேலும் வலிமைபடுத்தும் விதமாக அதி நவீன தாக்குதல் திறன் கொண்ட அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டர் இந்திய விமான படையில் இணைக்கப்பட்டுள்ளது. அதி நவீன தாக்குதல் திறன் கொண்ட அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டரை வாங்குவதற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியா அமெரிக்க இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஹெலிகாப்டர் தயாரிக்கும் பணி முழுவதும் நிறைவடைந்ததை அடுத்து அமெரிக்காவிடம் இருந்து இந்தியாவின் ஏர் மார்ஷல் பெற்றுக்கொண்டார்.
இந்திய விமான படையை மேலும் மேம்படுத்தும் விதமாக மணிக்கு 293 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இந்த ஹெலிகாப்டர் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளும் இந்த ஹெலிகாப்டரில் வைக்க கூடிய வகையிலும், இரவு நேரங்களிலும் இலக்கை துல்லியமாக குறி வைக்கும் வகையில் இந்த ஹெலிகாப்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை மாதம் முதல் முதற்கட்டமாக அப்பாச்சி ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையில், செயல்பட தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த ஹெலிகாப்டர்கள் குறிப்பிட தகுந்த பங்களிப்பை ராணுவத்துக்கும் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post