ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில ஆளுநர் ஹெலிகாப்டர் உதவியுடன் பார்வையிட்டார்.
கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள பிரதான அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை அடைந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா நதி வழித்தடத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள 18 மண்டலங்கள் நீரில் மூழ்கின. அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து ஆந்திர மாநில ஆளுநர் பிஷ்வபூஷண் ஹரிசந்தன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் உதவியுடன் பார்வையிட்டார். அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தேவையான அளவுக்கு கூடுதல் நிவாரண முகாங்கள் அமைத்து மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை உடனுக்குடன் செய்ய உத்தரவிட்டார்.
Discussion about this post