டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஐதராபாத் நிஜாம்களின் பாரம்பரிய நகைகளின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் புகழ்பெற்ற கோகினூர் வைரத்தை விட அளவில் பெரியதான ஜேகப் வைரமும் இடம் பெற்றுள்ளது.
இந்தியாவின் அணிகலன்கள் என்ற பெயரில் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஐதராபாத் நிஜாம்களுக்கு சொந்தமான நகைகளின் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், 173 விலைமதிப்பற்ற நகைகள் இடம்பெற்றுள்ளன. அவையணைத்தும் 18ம் நூற்றாண்டு மற்றும் 20ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவையாகும். உலகின் மிகப் பெரிய வைரங்களின் ஒன்றான 184 கேரட் எடையுள்ள ஜேகப் வைரமும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. புகழ்பெற்ற கோகினூர் வைரத்தை விட இந்த வைரம் 2 மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. பழங்கால ஓவியங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்த பாரம்பரிய நகைகளின் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
Discussion about this post