இந்தியாவில் ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் டெல்லி மற்றும் தெலங்கானாவை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுள்ளது . இந்த நிலையில், இத்தாலியில் இருந்து கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி ஜெய்ப்பூர் வந்த நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கூறிய ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் ரகு சர்மா, “இத்தாலியில் இருந்து பிப்ரவரி 29-ஆம் தேதி பயணி ஒருவர் ஜெய்ப்பூர் வந்து இறங்கினார் என்றும், விமான நிலையக் கண்காணிப்பில் அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரியவந்ததையடுத்து, அவர் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார் என்றும் கூறினார்.
இதையடுத்து, அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தாலும், இரண்டாவது பரிசோதனையில் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்ததாக தெரிவித்தார். மேலும், மருத்துவமனையில் அவர் தனிப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டுள்ளார் எனவும், இரண்டு பரிசோதனைகளிலும் வெவ்வேறு முடிவுகள் வந்திருப்பதால் அவருடைய மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளன என்றும் கூறினார்.
Discussion about this post