அமேசான் மழைக் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் பிரேசிலில் குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்சனைகள் அதிகரித்து இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள அமேசான் காட்டுத் தீயை அணைக்கும் பணிகள் தற்போது தீவிரம் அடைந்து வரும் நிலையில், காட்டுத் தீயால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரேசிலுள்ள “காஸ்மி இ டாமியா” குழந்தைகள் மருத்துவமனையில் சுவாசப் பிரச்சனை காரணமாக சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சிகிச்சைக்கு வரும் குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக கூறிய மருத்துவர்கள், காட்டுத் தீயால் சுற்றுச்சுழலில் ஏற்பட்டுள்ள திடீர் மாறுதலே இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், அரசு இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post