தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 689 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 87 பேர் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியர்கள் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 967ஆக உயர்ந்துள்ளதாக கூறினார். தொற்று உறுதி செய்யப்பட்ட 776 பேரில் 479 பேர் ஆண்கள், 297 பேர் பெண்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
Discussion about this post