இம்மாத இறுதிக்குள் அடிப்படை கட்டமைப்பு துறை சார்ந்த 10 புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என்றும், அதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அடிப்படை கட்டமைப்பு துறையில் குறைந்தபட்சம் 10 திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post