தமிழ்நாட்டின் புதிய சின்னமாக, தமிழ் மறவன் பட்டாம்பூச்சியை அறிவித்ததையடுத்து, தற்போது தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது…
தமிழ்மறவன் பட்டாம் பூச்சி இனத்தை தமிழ்நாடு அரசு சின்னமாக அறிவித்து, கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது. இதுவரை தமிழ்நாடு அரசின் சின்னங்களாக திருவில்லிபுத்தூர் கோபுரம், பனைமரம், வரையாடு, மரகதப்புறா, செங்காந்தள் மலர், பலாப்பழம், பரதநாட்டியம், கபடி ஆகியவை உள்ளன. தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இனத்தை தமிழ்நாடு அரசின் சின்னமாக அறிவிக்க, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின பாதுகாவலர் ஆகியோர் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்திருந்தனர். இதனை பரிசீலனை செய்த தமிழக அரசு சார்பில், தமிழ்மறவன் பட்டாம் பூச்சி இனத்தை தமிழ்நாடு அரசு சின்னமாக அறிவித்து, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டார். இதனை அடுத்து, தற்போது தமிழ்நாட்டின் புதிய சின்னமாக தமிழ் மறவன் பட்டாம்பூச்சி அறிவிக்கப்பட்டது, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது…
Discussion about this post