வரும் 28ம் தேதி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில், 2019 – 20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, வரும் 28ம் தேதி, காலை 11 முப்பது மணிக்கு, அதிமுக தலைமை அலுவலகத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Discussion about this post