மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து ஆவடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் நன்றி தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு தேர்தலின் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும், 3 ஆண்டுகளில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது என கூறிய அவர், ஆவடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோருக்கு, ஆவடி மக்களின் சார்பாக நன்றியினை தெரிவித்தார்.
Discussion about this post