2019ஆம் ஆண்டிற்கான புக்கர் விருது மார்கரெட் அட்வுட், பெர்னார்டின் எவரிஸ்டோ ஆகிய இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
புக்கர் பரிசு என்பது ஆங்கில மொழியில் எழுதப்படும் சிறந்த முழுநீளப் புதினங்களுக்கு வழங்கப்படும் பரிசாகும். 1968ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த விருதானது புனைவு இலக்கிய எழுத்தாளர்களுக்குக் கிடைக்கக் கூடிய மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில் இந்தாண்டிற்கான புக்கர் விருது வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது. இந்த விருதை மார்கரெட் அட்வுட் மற்றும் பெர்னார்டின் எவரிஸ்டோ ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். 79 வயதான மார்கரெட்டின் THE TESTAMENTS நூலுக்காக விருது வழங்கப்பட்டுள்ளது. பெர்னார்டின் எவரிஸ்டோவின் GIRL,WOMEN,OTHER என்னும் நூலுக்காக அவருக்கும் புக்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது தொகையான 50 ஆயிரம் யூரோவை இருவரும் பகிர்ந்து கொண்டனர். இந்த விருதைப் பெற்றதன் மூலம் அதிக வயதில் புக்கர் விருது பெற்றவர் என்கிற பெருமையை மார்கரெட்டும், முதல் கருப்பினப் பெண் என்ற பெருமையை பெர்னார்டினும் பெற்றுள்ளனர்.
Discussion about this post