அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளின் தற்போதைய கல்விக்கட்டணத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
நிதி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு கட்டணம் உயர்த்தப்படுவதாக அண்ணாப் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது. அண்ணாப் பல்கலை மற்றும் அதன் கீழ் இயங்கும் 13 கல்லூரிகளில் தற்போது வரை 22 ஆயிரத்து 380 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வுக்கான அரசின் ஒப்புதல் பெற இதன் முழு விவரங்கள் அறிக்கை உயர் கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பரிசீலனைக்கு பிறகு கட்டண உயர்வு தொடர்பான இறுதி கட்ட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post