இறுதி செமஸ்டர் தேர்வுக்கான விரிவான தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு தொடர்பான விரிவான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகள் நடைபெறுவதால் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் வெவ்வேறு பாடப்பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு ஒரே நாளில் தேர்வுகள் நடைபெற உள்ளன.
வரும் 24 ஆம் தேதி முதல் 29 தேதி வரையிலான நாட்களில் காலை 10 மணி முதல் 11 மணி வரையும், பகல் 12 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரையும், மாலை 4 முதல் 5 மணி வரையும் என நாள் ஒன்றுக்கு 4 முறை தேர்வு நடைபெற உள்ளது.
4 முறையும் வெவ்வேறு வகையான பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இறுதி செமஸ்டரில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கும் விரிவான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அரியர் தேர்வுக்கு இதுவரை பணம் செலுத்தாத மாணவர்கள நாளை மாலைக்குள் கட்டணம் செலுத்தி தேர்வுக்கு தயாராகலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post