ஊழல் புகார்கள் குறித்து விளக்கம் அளிக்கும்படி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர், தமிழக அரசை ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்தது, 200 கோடி ரூபாய் நிதி முறைகேடு, பணி நியமனத்துக்கு லஞ்சம் என பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார்.
இதையடுத்து தமிழக அரசு தாமாக முன்வந்து சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையத்தை நியமித்தது. இதனிடையே, பல்கலைகழக துணைவேந்தராக சூரப்பா ஓய்வுபெற்றாலும், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஆணையம் தெரிவித்தது.
இந்த நிலையில், தன்மீதான குற்றச்சாட்டு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் ஏன் நடவடிக்கை எடுக்ககூடாது என 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி சூரப்பாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.