விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உட்பட 4 பேராசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து, அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொறியியல் மாணவர்கள், மறு மதிப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பித்தபோது, பணம் வாங்கி கொண்டு, மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் பேராசிரியர்கள் ஆய்வு செய்ததில், 20 அரியர்கள் வைத்திருந்த மாணவர்கள் சிலர் ஒரே முயற்சியில் அனைத்து பாடங்களிலும் சிறப்பான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 37 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், பேராசிரியர்கள் செல்வமணி, குலோத்துங்கன், புகழேந்தி சுகுமாறன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, துணை வேந்தர் சூரப்பா உத்தரவிட்டார்.
Discussion about this post