லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா அமைப்புகளை அமைக்க வலியுறுத்தி, வரும் ஜனவரி 30ஆம் தேதி முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.
ஊழல்வாதிகளுக்கு எதிராக வலுவான லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி 2011ஆம் ஆண்டு அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரத போராட்டம் தேசிய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த சட்டம் 2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகும் மாநிலங்கள் தோறும் ஊழலுக்கு எதிரான அமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. இதனிடையே இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு 30க்கும் மேற்பட்ட முறை கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்துள்ள அன்னா ஹசாரே, லோக்பால் மற்றும் லோக்ஆயுதா அமைப்புகளை அமைக்க வலியுறுத்தி வரும் ஜனவரி 30ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள போவதாக அறிவித்துள்ளார்.
Discussion about this post