தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பாக இணைய வழி சுவடியியல் தொடர்பான பயிற்சிப்பட்டறை மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இரண்டாவது மாதாந்திரக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. கீழ்த்திசை சுவடிகள் நூலக வடமொழி சுவடிகள் குறித்த பொருண்மையில் உதவி நூலகர் ச.சிவகுணன் சிறப்புரை ஆற்றுகிறார்.
அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் (ம) ஆய்வு மையம்,
அண்ணா நூற்றாண்டு நூலகம் 7வது தளம்,
கோட்டூர்புரம்,
சென்னை – 85
இணையவழி மாதாந்திர கூட்டம் – 2
நாள் – 28.03.2021, ஞாயிறு
நேரம் – மதியம் 11.00 மணி முதல் 12.00 வரை
இணையத்தொடர்பு -meet.google.com/ivw-yziy-sxo
பிரிட்டிஷ் இந்திய ஆட்சிக்காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய சில தனித்துவமிக்க ஆங்கிலேயர்களால் பழங்கால ஓலைச்சுவடிகள் சேகரிக்கப்பட்டு வந்தன. இதைப் பாதுகாக்கும் பொருட்டு 1869ம் வருடம் உருவானதே இந்த நூலகம்.
கர்னல் காலின் மெக்கன்சி பற்றி அறிவது அவசியம். இந்நூலகத்தின் தந்தை என்றே இவரைக் குறிப்பிடலாம். காரணம், அவர் சேகரித்த சுவடிகளே நூலகமாக மாறி நிற்கிறது. இந்த சுவடிகளைக் குறித்து அறிந்து கொள்ளும் விதமாகவும் ஆய்வுப் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தும் விதமாகவும் இந்த இணையவழி கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
Discussion about this post