அனிருத்தின் valentine's day treat என்ன தெரியுமா ?

அனிருத்தின் இசையானது தனித்தன்மை வாய்ந்ததாகவும்,இளைஞர்களை விரைவில் கவரும் வகையிலும் அமைந்திருக்கும். பேட்ட திரைப்படத்தின் பாடல்கள் மூலம் கலக்கிய அனிருத்,அடுத்து உலக நாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் -2 திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார்.இப்படி மிகவும் பிசியான மியூசிக் டேரக்டராக வலம் வரும் நிலையிலும் காதலர்களுக்கு பரிசு கொடுப்பதை மறக்கவில்லை. ஆமாம், வரும் காதலர் தினத்தன்று single track ஒன்றை ரீலிஸ் செய்ய உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.இது நிச்சயமாக காதலர்களுக்கு காதலர் தின பரிசாக இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் இவர் காதலர் தினத்தன்று வெளியிட்ட அனைத்து single track பாடல்களும் அனைவராலும் அதிகமுறை கேட்கப்பட்ட பாடல்கள் ஆகும்.இவர் 2015 ல் ‘எனக்கென யாருமில்லையே’என்ற பாடலையும்,2016 ல் ‘ அவளுக்கென்ன’, அதேபோன்று 2017 ல் ‘ஒன்னுமே ஆகல’,கடந்த 2018 ல் ‘ஜூலி’ என்ற பாடலையும் வெளியிட்டார்.தற்போது பிப்ரவரி 14 அன்று வெளியாகும் single track-கிற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version