மீ டூ என்ற ஹேஸ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் தாக்குதல்களை வெளியே கூறி வருகின்றனர். எனினும் சில பெண்கள், தங்களுக்கு பிடிக்காத ஆண்களை பழி தீர்க்கவும் இதனை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் பாலிவுட் திரையுலகத்தை சேர்ந்த Anirban Blah என்பவர், மும்பையில் பிரபலமான வாசி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்றனர்.
kwan entertainment என்ற நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்த அனிர்பன் மீது 4 பெண்கள் மீ டூ ஹேஸ்டேக் மூலம் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனால் அந்த நிறுவனத்தில் இருந்து விலகுமாறு அவர் நிர்பந்திக்கப்பட்டு, பின்னர் விலகினார்.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு தகவல் அனுப்பிவிட்டு, மும்பை வாசி பாலத்திற்கு குதிக்கச் சென்றார்.
அந்த பத்திரிக்கையின் நிருபர் உடனடியாக அப்பகுதி காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு, இந்த செய்தியை தெரிவித்தார்.
துரிதமாக செயல்பட்ட காவலர்கள் கடைசி நேரத்தில் அவரை தடுத்து நிறுத்தினர். சில நிமிடங்கள் தாமதாக வந்திருந்தால், அவர் பாலத்தில் இருந்து குதித்து இறந்திருப்பார் என காவலர்கள் கூறியுள்ளனர்.
Discussion about this post