அந்தமானின் தென்கிழக்கு பகுதியில் 720 கிலோ மீட்டர் தொலைவில் பபுக் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் அருகே புயல் சின்னம் உருவாகியுள்ளது. போர்ட்பிளேரில் இருந்து 900 கிலோ மீட்டர் கிழக்கே தென்சீனக் கடலில் இந்த புயல் உருவாகியுள்ளது. அந்தமானின் தென்கிழக்கு பகுதியில் 720 கிலோ மீட்டர் பபுக் புயல் மையம் கொண்டுள்ளது.
இந்தப் புயல் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கூறியுள்ளது. எனவே, அரக்கோணத்தில் இருந்து மீட்புப் படையினர் அந்தமான் விரைந்துள்ளனர்.
Discussion about this post