ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பழங்காலப் பொருட்கள், எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முதுகுளத்தூரிலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேலக்கொடுமலூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கே பண்ணைக்குட்டை அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்ட போது, சுடுமண்ணால் ஆன உறை கிணறு தென்பட்டுள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், மனித எலும்புக்கூடுகள் உட்பட பல்வேறு பொருட்களும் சிதைவடைந்த நிலையில் கிடந்துள்ளன. எனவே அப்பகுதியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post