மணவாழ்க்கை மற்றும் உறவுகளின் பிரிவுகள் குறித்து மேடையில் தொகுப்பாளினி டிடி மன உருகி அட்வைஸ் செய்துள்ளார்.
சின்னத்திரை மிகவும் பிரபலமான தொகுப்பாளினி டிடி என்ற திவ்ய தர்ஷினி . இவர் பல்வேறு நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2017-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்ததுக் கொண்டனர்.
இந்நிலையில் ஒரு விருது விழா மேடையில் தொகுப்பாளினி டிடி , தன் வாழ்க்கையில் நடந்த துயரம் பற்றி உருக்கமாக பேசியுள்ளார். அதில் “நம் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் ஏன் கல்யாணமான உறவு கூட முறியலாம், வேறு எந்த உறவுகள் வேண்டுமானாலும் தள்ளி போகலாம். ஆனாலும் நாம் வழக்கம்போல காலையில் எழுந்து மேக்கப் போட்டுக்கொண்டு வேலைக்கு சென்றால் , உங்கள் அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது” என தொகுப்பாளினி டிடி மனம் உருக பேசியுள்ளார்
Discussion about this post