ஸ்டாலின் பதவி விலக திமுக தொண்டர்களே விருப்பம்: அன்புமணி

திமுக தலைவர் பதவியிலிருந்து ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என திமுக தொண்டர்களிலேயே பலர் விரும்புவதாக அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவருக்கு அதிமுக கூட்டணிக்கட்சிகள் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து பேசிய அன்புமணி ராமதாஸ், பாமக திமுகவுடன் கூட்டணி வைக்காமல், அதிமுகவுடன் கூட்டணி வைத்துவிட்டது என்ற ஆதங்கத்தில் ஸ்டாலின் ஏதேதோ பேசி வருவதாக கூறினார்.

Exit mobile version