சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ளது ராமநாதன்செட்டியார் நகராட்சி அரசு உயர் நிலைப் பள்ளி சிறந்த நிர்வாக திறமைக்காக ISO தரச்சான்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது…இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி டி.டி.நகரில் ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி, 1938ல் துவக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. 2014 ஆண்டு நடுநிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது 218 மாணவர்களும் 6 ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஓத்துழைப்போடு தற்போது 1325 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு மட்டும் 350க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க முடியாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். அந்த அளவுக்கு இங்கு குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். காரணம் பள்ளியில் சிலம்பம், நாடகம், கை தொழில், கட்டுரை போட்டி, எழுத்து போட்டி, ஸ்போக்கன் இங்கிலீஸ் ஆகியவையும் ஸ்மார்ட் போர்டு மூலம் வகுப்பறையில் பாடமும் நடத்தப்படுகிறது.
தனியார் பள்ளிகள் கூட செய்ய முடியாத பல சாதனைகள் படைக்கும் இந்த பள்ளிக்கு ISO சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது மற்ற அரசு பள்ளிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Discussion about this post