சசிகலா வழக்கில் சிறையில் நடந்த விவகாரங்களை வெளியே கொண்டு வந்த ஐபிஎஸ் அதிகாரியான ரூபா திடீரென திரைப்படத்திற்கு பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.இதற்கு முன்பு இவர் மாடலிங் துறையில் கடந்த 1998-ம் ஆண்டில் மிஸ் பெங்களூரு மற்றும் மிஸ் தாவணகெரே பட்டங்களை வென்றவர்.நேர்மையான ஐ.பி.எஸ். அதிகாரியாக செயல்பட்டதற்காக பல விருதுகள் மற்றும் ஜனாதிபதியின் கையால் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா பேயலதாதா பீமண்ணா என்ற கன்னட படத்தில் முதன்முறையாக பாடல் ஒன்றை பாடியுள்ளார்.தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இவர் பாடுவதை பார்த்த பேயலதாதா பீமண்ணா பட குழுவினர், இவரை பாட அழைத்ததை ஏற்ற ரூபா வெற்றிகரமாக பாடியும் கொடுத்துள்ளார்.
பாடல் குறித்து “ரூபா”கருத்து :இது இருவர் பாடும் டூயட் பாடல் கிடையாது. நான் இந்துஸ்தானி இசையை கற்றிருக்கிறேன். அந்த அனுபவத்திலேயே இந்த பாடலை பாடினேன். இப்பாடலுக்காக ஒருவாரம் பயிற்சி எடுத்து பாடினேன்.லதா மங்கேஸ்கர், வாணி ஜெயராம் ஆகியோரது பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் ஸ்ரேயா கோஷல் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது.’என்று ரூபா கூறினார்.
தற்போது,அவர் பாடல் பாடியபோது எடுத்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Discussion about this post