சென்னை ஐஐடி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட வழக்கை மத்திய குற்றபிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகிறனர். இதுதொடர்பாக சென்னை ஐஐடி வளாகத்தில் ஆய்வு நடத்திய அதிகாரிகள், ஐஐடி பேராசிரியர்கள் மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐக்கு அல்லது வேறு தனிக்குழுவுக்கு மாற்றி விசாரிக்கும்படி தேசிய மாணவர் கூட்டமைப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
தற்போது விசாரணையில் ஈடுபட்டு வரும் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் குழுவில் சிபிஐ அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post