பிரிட்டனில் இருந்து ஆக்ஸிஜன் நிரப்பிய 450 சிலிண்டர்கள் சென்னை வந்தடைந்தன.
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் ஆக்சிஜன், வெண்டிலேட்டர்கள், ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
இந்த நிலையில், இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி கேட்டுக் கொண்டதன் பேரில், ஆக்சிஜன் நிரப்பிய 450 சிலிண்டர்களை பிரிட்டன் ஆக்சிஜன் நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.
லண்டனில் இருந்து இந்திய விமானப் படையின் விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டன.
எங்கு வேண்டுமென்றாலும் எடுத்தும் செல்லும் விதத்தில் 46 புள்ளி 6 லிட்டர் ஆக்சிஜன் நிரப்பட்ட 450 சிலிண்டர்களை முப்படை அதிகாரிகள் தரையிறக்கினர்.
Discussion about this post