சென்னை அருகே பல்கலைக்கழக உதவி பேராசிரியையை அழைத்து சென்று தகாத வீடியோ எடுத்த மாணவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 23 வயதான விவேஷ் சென்னை அம்பத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டே மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் பல்கலைகழகத்தில் பொறியியல் படித்து வந்துள்ளார்.அதே பல்கலைககழத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 25 வயது மதிக்கதக்க இளம்பெண் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். விவேஷும்-உதவி பெண் பேராசிரியரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் நண்பர்களாக பழகிவந்துள்ளனர்.
இதையடுத்து விவேஷ் கடந்த வாரம் தன்னுடைய படிப்பு முடிந்து விட்டதாகவும், தான் ஆந்திராவுக்கே செல்ல இருப்பதாகவும் ஆசிரியரிடம் கூறியுள்ளார். ஆந்திராவிற்கு செல்வதற்கு முன்பு உங்களுக்கு ட்ரீட் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.நண்பர்களாக பழகியதால் அவரை நம்பிய ஆசிரியை விவேஷுடன் செல்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். கடந்த 19ம் தேதி மாலை சுமார் 7 மணியளவில் உதவி பேராசிரியர் தங்கியிருந்த சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோயில் பகுதியில் உள்ள மகளிர் விடுதிக்கு வந்த விவேஷ் உதவி பேராசிரியரை தனது இருசக்கர வாகத்தில் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு ஒதுக்குப்புறமான பகுதிக்கு சென்று உதவி பேராசிரியையை கத்தியை காட்டி மிரட்டி தகாத முறையில் வீடியோ, மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் தன்னுடன் தகாத உறவில் ஈடுபட வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து வெளியில் சொன்னால் வீடியோ, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். ஆசிரியை எவ்வளவு கெஞ்சியும் கேட்காத விவேஷ் பின்னர் ஆசிரியை அழைத்து வந்து சோழிங்கநல்லூர் விடுதியில் விட்டு விட்டு சென்றுள்ளார்.
அடுத்த நாள் பேராசிரியைக்கு போன் செய்த விவேஷ், தன்னோடு வருமாறு வற்புறுத்தியுள்ளார். இல்லாவிட்டால் தகாத முறையில் எடுத்த வீடியோவைவெளியிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ந்துபோன பேராசிரியை, செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் தைரியமாக சென்று புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அறிவுரையின்படி விவேஷிடம் பேசி அவர் அழைத்த இடத்திற்கெல்லாம் உதவி பேராசிரியரும் சென்றார். இவரை பின்தொடர்ந்த காவல்துறையினர் சென்னை கோயம்பேடு பகுதியில் உதவி பேராசிரியருடன் பேசும்போது கையும் கவுமாக பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர் விசாரணையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த உதவி பேராசிரியர்க்கு இங்கு யாரும் இல்லை. அவர் யாரிடமும் என்னைபற்றி புகார் அளிக்கமாட்டார் என்ற தைரியத்தில் இதுபோன்று செயலில் ஈடுபட்டதாக விசாரணையில் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் விவேஷ் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Discussion about this post