அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்தன்று, அம்மன் சாமி ஊஞ்சல் ஆடுவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற இக்கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பிற்காக கோயிலின் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இரவு பதிவாகும் காட்சியை ஊழியர்கள் கண்கண்காணிப்பது வழக்கம். இந்நிலையில், கார்த்திகை தீபத்தன்று பதிவான காட்சிகளை ஊழியர்கள் ஆய்வு செய்த போது, கோயிலின் கருவறையில் அம்மன் ஊஞ்சல் ஆடுவது போன்று 2 மணிநேர காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனால் கோயில் நிர்வாகிகள் மெய்சிலிர்த்து போனார்கள். மேலும் இந்த தகவல் மாவட்டம் முழுவதும் பரவியது. இதை தொடர்ந்து, அம்மன் ஊஞ்சல் ஆடுவது போல் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
Discussion about this post