அம்மா உணவகங்களை சேவை மனப்பான்மையோடு விடியா அரசு செயல்படுத்த வேண்டும் என்றும், லாப நஷ்ட கணக்கை பார்க்க கூடாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.சென்னை புளியந்தோப்பில், அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு பழங்கள் மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகம் அமைதி பூங்காவாக விளங்கியதாகவும், விடியா ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை எனவும், கொலைகள் சர்வ சாதாரணமாக நடந்து வருவதாகவும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டினார்.
Discussion about this post