மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவாக 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி அம்மா அருங்காட்சியகத்தை அப்போதைய முதல்வரும், கழக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தார். இந்த அருங்காட்சியகத்திற்கும், அருகே உள்ள நினைவிடத்திற்கும் தினந்தோறும் ஏராளமான மக்கள் வருகை தந்து வருகின்றனர். இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அம்மா அருங்காட்சியகமானது மூடப்பட்டுள்ளது. மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வருகை தரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும், நினைவிடத்திற்கு செல்லும் பாதையானது ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
Discussion about this post