தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், அம்மா ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கால்நடை பராமரிப்பு துறை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு ஏக்கர் மட்டும் வைத்திருக்கும் 12 ஆயிரம் விதவை பெண்களுக்கு விலையில்லா கறவை பசு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு 6 லட்சம் செம்மறி, வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் செயல்படுத்துவது கிடையாது என்று கூறிய அவர், வெளிநாட்டு பயணத்திற்கு பிறகு, அம்மா ஆம்புலன்ஸ் சேவையை 22 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் துவக்கி வைப்பார் என்று தெரிவித்தார்.
Discussion about this post