மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்றுக் கொண்டார்.
இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை பிடித்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டது. அவர்களுக்கான இலாகாக்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. பாஜக தேசிய தலைவராக இருந்த அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் வடக்கு பிளாக்கில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்தில் அவர் தனது பொறுப்பினை இன்று ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து கோப்புகளிலும் அவர் கையெழுத்திட்டார்.
இதையடுத்து, அவருக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷான் ரெட்டி உள்ளிட்டோர் சால்வைகளை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர். முன்னதாக உள்துறை அமைச்சராக பொறுப்பேற்க வந்த அவருக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Discussion about this post