மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்க உள்ளதையடுத்து, அமித் ஷா, ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட அமைச்சர்கள் மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
17-வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தாங்கள் வகித்து மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்தனர்.
இதேபோல், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர்களது ராஜினாமாவை, மாநிலங்களவை செயலகம் ஏற்றுக்கொண்டது.
Discussion about this post