அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை காங்கிரஸ் கட்சி தாமதப்படுத்துவதாக பாஜக தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா, “ராமர் கோயில் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளதாகவும் அயோத்தியில் ராமர் கோயில் விரைந்து கட்டப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு, உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் மூலம் காங்கிரஸ் முட்டுக்கட்டை போடுவதாக குற்றம் சாட்டிய அவர், ராமர் கோயில் விவகாரத்தில் தங்களின் நிலை குறித்து காங்கிரஸ் கட்சி அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மோடியை நீக்க வேண்டும் என்பது மட்டுமே எதிர்க்கட்சிகளின் ஒரே இலக்காக உள்ளதாக தெரிவித்த அமித்ஷா, ஆனால் மோடியோ, நாட்டில் இருந்து வறுமை , ஊழல் ஆகியவற்ற நீக்க விரும்புகிறார் என்று தெரிவித்தார்.
Discussion about this post