அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு மூளையாக செயல்பட்ட அல்கைதா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனையும், அவரது ஆதரவாளர்களையும் ஒடுக்க, அமெரிக்கப்படைகள் ஆஃப்கனிஸ்தானில் குவிக்கப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவந்து அமெரிக்க படைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், ஆஃப்கனிஸ்தானுக்கான அமெரிக்க ராணுவப் பிரிவு செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாலிபான்களுடனான அமைதி ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், நிபந்தனையுடன் தங்களது படைகள் வெளியேறத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆஃப்கனிஸ்தானில் உள்ள அமெரிக்க படையினரின் எண்ணிக்கையை 135 நாட்களில் 13 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரத்து 600 ஆகக் குறைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post