அமெரிக்காவின் NOVAVAX தடுப்பூசி இந்தியாவில் COVOVAX…

NOVAVAX தடுப்பூசியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் சீரம் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனம், அமெரிக்காவின் NOVAVAX தடுப்பூசிக்கான அனுமதி பெற்று இந்தியாவில் தயாரித்து வருகிறது. COVOVAX எனும் பெயரில் தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிராக 90 புள்ளி 4 சதவீதம் செயலாற்றுவதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் 29 ஆயிரத்து 960 தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் இந்த முடிவு தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில், 15 மையங்களில் ஆயிரத்து 600 தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்ட இரண்டு மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் திறன் கோவாக்ஸ் தடுப்பூசிக்கு இருப்பதாகவும், செப்டம்பர் முதல் டிசம்பருக்குள் 20 கோடி COVOVAX தடுப்பூசியை தயாரித்து விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரைவில் குழந்தைகளிடம் COVOVAX தடுப்பூசியை செலுத்தி பரிசோதிக்க உள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

 

Exit mobile version