அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணங்களில் -40 டிகிரி வரை நிலவும் கடுங்குளிரால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆர்ட்டிக் பகுதியில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றத்தால் அமெரிக்கா முழுவதும் குறைந்தது 6 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடுங்குளிர் நிலவி வருவதால் அமெரிக்காவில் 2000 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
வீடற்ற ஏழைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். பள்ளிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்டார்டிக்காவின் பகுதிகளை விட அதிக குளிராக சிகாகோ இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் வெளியே செல்ல வேண்டாமென சிகாகோ மேயர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் மேற்கு திசையில் தட்பவெப்பநிலை -40 டிகிரி செல்சியஸ் வரை செல்லலாம் என்று அமெரிக்க தேசிய வானிலை நிலையம் அறிவித்துள்ளது.
Discussion about this post