தேனி மாவட்டத்தில், கொத்தமல்லி விளைச்சல் அமோகமாக இருந்தாலும், உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், கூடலூரில் மார்கழி, தை மாதங்களில் கொத்தமல்லி அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு, பருவமழை உரிய காலத்தில் பெய்ததால் கொத்தமல்லி விளைச்சல் சிறப்பாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். ஆயினும், உரிய விலை கிடைக்காததால் செலவு செய்த தொகை கூட கிடைக்க வழியில்லை என அவர்கள் வேதனையோடு கூறுகின்றனர். ஒரு கிலோ கொத்தமல்லிக்கு 10 ரூபாய் கிடைத்தால் மட்டுமே லாபம் கிடைக்கும் என கூறும் விவசாயிகள், தற்போது ஒரு கிலோவிற்கு 3 ரூபாய் மட்டுமே கிடைப்பதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post